என்னை பற்றி வெளிவந்த செய்திகள் ஆதாரம் duraipudukkottai.blogspot.com
சாதாரணமாக நம்மில் பலர் அடுத்தவருக்கு சிறிய உதவி செய்தால் கூட
பெரிய அளவில் விளம்பரம் செய்வதை பார்த்திருப்போம்.உதாரணமாக ஒரு கோவிலுக்கு ஒரு மின் விளக்கை ஒருவர் நன்கொடையாக கொடுக்கிறார் என்றால்
அந்த மின் விளக்கே மறையும் அளவிற்கு நன்கொடை கொடுத்தவரின் பெயர் அதில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்த கலிகாலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து,வெளி உலகிற்கு தான்
கொடை கொடுத்தது வெளியில் தெரியாத வண்ணம் ,ஏழை எளிய மக்களுக்கு
உதவி செய்து கொண்டிருக்கும் கலியுக கர்ணன் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு
நிகர் வேறு யாரும் கிடையாது .மேற்கண்ட படத்தில் மூன்று பெண் குழந்தைகள்
உள்ளன ,அய்யா டாக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் கடந்த ஆண்டு இந்த குழந்தைகளின் கல்விக்கு தேவையான நிதி உதவி தந்து உதவியவர் என்ற செய்தி யாராலும் மறுக்க முடியாது .நான் இவ்வாறு கூறுவது அவரை பெருமை படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல,அவருடைய மகுடங்களில் ஜொலிகின்ற சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டேன் .ஏனெனில் அவரை பெருமை படுத்துவதற்காக அல்ல , .ஓர் ஆயிரம் ரவிச்சந்திரன் இந்த
தேசத்திற்கு வருக பாரத தாயின் கண்ணீரை துடைக்க .பாரத் மாதாக்கி ஜே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக