என் கடன் பணி செய்து கிடப்பதே!

செவ்வாய், 15 மார்ச், 2011

எட்டாவது அதிசயம்


என்னை பற்றி வெளி வந்த செய்திகள் (ஆதாரம் ; duraipudukkottai .blogspot.com )


புதுக்கோட்டை மாவட்டத்தில்  அமைந்திருக்கும் குக்கிராமமான குடிமியான்மலை  வரலாற்று சிறப்புமிக்க ஒரு பகுதியாகும் .உலகின் எட்டாவது அதிசயம் ஒன்றினையும் அங்கு  காணலாம். ஆம் அந்த எட்டாவது அதிசயம் வேறுயாருமல்ல அருமை சகோதரர் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் தான் என்று சொல்லவேண்டும்.மிக சிறிய  வயதில் அறக்கட்டளை ஓன்று நிறுவி அதன் மூலம் மக்களுக்கு பல நல்ல செயற்கரிய உதவிகளை  செய்து கொண்டுஇருக்கிறார் .சுமார் 200 க்கும்  மேற்பட்டவர்களுக்கு தையல் இயந்திரமும் ,பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 100 க்கும் மேற்பட்ட சைக்கிள் களையும் வழங்கி,ஏழை எளிய மாணவர்களுக்கு  கல்வி பயில தேவையான நிதியை அறக்கட்டளை மூலம் வழங்கி மாணவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.அதே போல் இவர் கணக்கில் அடங்காத இலவச திருமணத்தை நடத்திவைத்து ஏழைகளின் மனதில்  இதய தெய்வமாக வீற்றுக்கிறார்.அதே போல் நோய் வாய் பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற பொருள் உதவி செய்து ,நோயின் பிடியில் இருந்து ஏழை  எளிய மக்களை  விடுவித்து ஏழை களின் காவல் தெய்வமாக இவர் இருப்பது வியப்பான ஒன்றாகும். சாதாரணமாக ஒரு தனி மனிதரிடம் ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இருப்பது வியப்பான ஒன்றாகும்.இவர் இதுவரை 100 க்கும் மேற் பட்டோருக்கு இலவசமாக கறவைமாடுகள் வழங்கி ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றி உள்ளார் என்பது மிக சிறப்பான செய்தியாகும் .அய்யா டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களின் சேவைகளை பற்றி சொல்ல வேண்டுமானால் ,இங்கு  எழுதுவதற்கு பக்கங்கள் போதாது ,அய்யா அவர்களின் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக