என் கடன் பணி செய்து கிடப்பதே!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் ஒரு மனிதர்

 

நாம் கடை ஏழு வள்ளல்களை பற்றி கேள்விபற்றிருப்போம் அவர்கள்
   பேகன் ,பாரி,திருமுடிகாரி,அதியமான் ,ஆய் ,வள்ளல் ஓரி ,நெடுமான் ,அஞ்சி , போன்றவர்களை
பற்றி  வரலாறு மூலமாக அறிந்திருப்போம்.ஆனால் இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக
 வாழும் ஒரு மனிதர், அவர்தான் எட்டாவது கொடை வள்ளல் என்று அழைக்கப்படுகிறார் . .நீங்கள் வியப்புடன் யார் ? இந்த  உயர்ந்த
மனிதர்  யார்  என அறிந்து கொள்ள ஆர்வமுடன்  இருப்பீர்கள்,என்று எனக்கும் தெரியும், அவர் வேறு யாருமில்லை , சவரிமுத்து  அருள் தாஸ்  நினைவு
அறக்கட்டளையின் முதன்மை செயலாக்க இயக்குனர் டாக்டர்
A . ரவிச்சந்திரன் தான் அவர்.




                                                                    இவர்  1973
ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
குடிமியான்மலை என்ற ஊரில் அருள்தாஸ் மற்றும் சந்திரா என்ற தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தார் . இவருடைய குழந்தை பருவத்தில்
இவர் மிகுந்த சுறுசுறுப்பும் ,அறிவாற்றலும் பெற்றவராக திகழ்ந்தார் .

                இவர் தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நேசித்தார் .தன்னுடைய தொடக்க கல்வியை குடுமியான்மலையில் உள்ள தொடக்க பள்ளியில் பயின்றார். .உயர் கல்வியை பரம்பூரிலும் ,மேல் நிலை கல்வியை அன்னவாசலிலும் பயின்றார் .இவர் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் சோதிடத்திலும் ,வரலாற்று பாடத்திலும் இளங்கலை பட்டம் பெற்றார் .
 
            டாக்டர் А. ரவிச்சந்திரன் அவர்கள் தமிழக அரசின் "அறிவொளி" இயக்கத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றியவர். இந்த இயக்கம் தமிழ் நாட்டில்  சமுதாயத்தில்  உள்ள படிப்பறிவின்மையை ஒழிக்க பணி புரிந்தது .இவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் "காவல் நண்பர்கள் "குழுவில் உறுப்பினராக பணியாற்றிவர்
என்பதும்  குறிப்பிட தக்கது .
           இவருடைய ஜோதிட திறமை  மக்களிடையே பெரும் மதிப்பை பெற செய்தது .காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், .ஆசிரியர்கள், பேராசிரியார்கள் ,மற்றும் ஏழை பணக்காரர் என சமுகத்தின் அனனைத்து தரப்பினர்களும் இவரை தேடி வர செய்தது  .
           இவர் தன்னுடைய மூத்தோர்களிடம் இருந்து மக்களுக்காக  வாழ் என்ற
பண்பை பெற்றிருக்கிறார் . அந்த மூத்தோர்கள் சாதி ,மத இன ,பேதமின்றி
மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு பணி செய்தவர்கள் .இவர் இயற்கையாக சமுகத்தின் தீங்குகளை வேர் அறுத்து அதை கலச்சாரம் ,பாரம்பரியம் ,போன்றவற்றில் ஊக்கமுள்ள  மலர்களாக மாற்றும் 
பொறுப்புடையவர் .
இவருடைய  அன்பு ,நாட்டில் உள்ள அனைவருக்கும் ,குறிப்பாக சமுதாயத்திலும்
பொருளாதாரத்திலும், பிற்படுத்தபட்டவர்கள்  இவருடைய பண்பிற்கு தக்க புகழாரம்
சூட்டயுள்ளர்கள் .

இவருடைய கடந்த கால  வாழ்க்கை இவரை மக்களுக்கு உதவி செய்ய
தூண்டி  உள்ளது என்பது குறிப்பிடதக்கது .அதனால் இவர் தன்னுடைய
சொந்த பணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்தார் .தன்னால் மட்டும் இதை தனியே செய்ய முடியாது
என முடிவு செய்து, ஒரு அறக்கட்டளை  ஒன்றை நிறுவி  அதன்  முலம்
 சமுதயாத்திற்கு
உதவி செய்வதென முடிவு செய்தார். .இவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான திரு  நல்லகுமார் மற்றும்
திரு டேனியல் ஜான் கென்னடி ஆகியோரிடம் அறக்கட்டளை ஆரம்பிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை சொன்னார் .இவருடைய நண்பர்கள் மிகவும்
சந்தோஷ பட்டார்கள். .அறக்கட்டளை ஆரம்பிக்க இவரை ஊக்குவித்து உறுதுணையாகவும் இருந்தார்கள் .
    
இப்படியாக
2006 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 25 ம் தேதி சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை  என்று தன்னுடைய தாத்தா மற்றும் அப்பா பெயரில் ஆரம்பித்தார் .இவர் தன்னுடைய நண்பர்கள் திரு நல்லகுமார் அவர்களை 
அறங்காவலராகவும்   ,
திரு டேனியல் ஜான் கென்னடி அவர்களை 


பொருளாளராகவும்   மற்ற  நண்பர்களை உறுப்பினர்களாகவும்  சேர்த்து கொண்டு அறக்கட்டளையை  துவக்கினார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக